Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி..! 5 புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சட்டப்பேரவையில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். 

Breakfast for government school students .. CM Stalin Announcement
Author
Chennai, First Published May 7, 2022, 11:50 AM IST

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு படிப்படியாக விரிவு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சட்டப்பேரவையில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். 

Breakfast for government school students .. CM Stalin Announcement

திட்டங்கள் விவரம்

* அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தாண சிற்றுண்டி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்த திட்டம் படிப்படியாக விரிவு செய்யப்படும். 

* 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். 

* டெல்லியில் உள்ளது போல் இனி தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடு ஊக்கப்படுத்தும் நேரத்தில், அவர்களின் கலை, எழுத்து, உள்ளிட்ட திறமைகள் மேம்படுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

* கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளது போல், நகர்ப்புறங்களிலும் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படம். 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளிலும் 180 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடத்தில் 708 மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 

* சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் மனுக்களை பெற்று, ஆட்சி அமைத்த பிறகு, அந்த மனுக்களை பரிசீலனை செய்ய தனித்துறை உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் வர உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios