சீமானுக்கு ஆண் குழந்தை... மகிழ்ச்சியில் காளிமுத்து குடும்பம்..!

First Published 11, Jan 2019, 6:29 PM IST
boy born in Seeman
Highlights

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவரது அன்புத் தம்பிகள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவரது அன்புத் தம்பிகள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமானின் திருமணம் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதோடு, ’அ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தாலியை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், சீமான் – கயல்விழி தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அண்ணனுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

’புலிக்குப் பிறந்த புலிக்குட்டிக்கு அண்ணன் என்ன பெயர் வைக்கப்போகிறாரோ’ என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் சீமானின் அன்புத் தம்பிகள். இதனால் காளிமுத்து குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  
 

loader