அமைச்சர் ஜெயகுமார், பா.ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜாவும் விமர்சனம் செய்ததற்கு கடுமையான பதிலடி கொடுத்து, நடிகர் கமல் ஹாசன்அறிக்கை வௌியிட்டுள்ளார்.

​ கடந்த சில வாரங்களாகவே கமல் பேசுவது, எழுதுவது அனைத்துமே அரசியலாகி வருகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாள் முதலே விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

கமலுக்கு எதிரான சர்ச்சையை இந்து அமைப்புகள் தான் முதலில் தொடங்கி வைத்தன.  கலாச்சாரத்தை கெடுக்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும் அந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அத்துடன் நடிகர் கமல்ஹாசனின் வீடும் முற்றுகையிடப்பட்டது.

இதையடுத்து, நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் அவர் பதிவிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. தோற்று இருந்தால் போராளி, முடிவு எடுத்தால் முதல்வர் என்று அறிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசைசவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இதில் கமல் முதுகெலும்பு இல்லாத கோழை. முதுகெலும்பு இல்லாத நபர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், மாநில அரசை விமர்சித்த நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து நடிகர் கமல் ஹாசன் நேற்று பரபரப்பு அறிக்கை வௌியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்தாவது

நான் விடுத்த அறிக்கை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, காசுக்கு விலைபோகாத தமிழகவாக்காளர்களுக்கும் சேர்த்துதான். ஊழல் குறித்து அனைவரும் கூறி, ஊடகங்களில்வந்த பின்பும் சாட்சி உண்டா?, ஆதாரம் உண்டா எனக் கேட்பது ஊழல்வாதிகளுக்கே இருக்கும் குணாதியசம்.

ஆதாரத்துடன் அரசியலுக்கு வா என்று கூறும் தம்பி அமைச்சர் ஜெயக்குமார், எலும்பு நிபுனர் பா.ஜனதா தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோருக்கு ஒன்று சொல்கிறேன். நான் இந்தி திணிப்புக்கு எதிராக எப்போது குரல்கொடுத்தேனோ அப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்.

வரி ஏய்ப்புக்காக என்னை மீது நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவது சிரிப்பையும், கோபத்தையும் வரவழைக்கிறது. ஊழலை ஆதாரத்துடன் கூற வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார். அதற்கு மக்கள் இருக்கிறார்கள். நான் எதற்கு கூற வேண்டும்.

அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மக்களே, தங்களின் வசதிக்கு ஏற்ப ஊடகங்கள் வாயிலாகவும், இணைதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கிறேன். டிஜிட்டல் முறையில் ஆதாரங்களை அனுப்பி வையுங்கள். காகிதத்தில், கடிதத்தில் அனுப்பினால் கிழித்து தூக்கி எறிவார்கள். 

அரசின் ஊழலால் அனுபவித்த இன்னல்களை, நாகரீகமான வார்த்தைகளுடன் கேள்விகளாக மக்கள் அனுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் அனைத்து மக்களையும் கைது செய்வீர்களா அல்லது  பதில் சொல்வார்களா ஆட்சியார்கள். லட்சக்கணக்கான மக்களை கைது செய்து அடைக்க சிறை இல்லை.

சினிமா துறையில் நடந்த ஊழலை நானை சுட்டுகிறேன். வரிவிலக்கு அளிக்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு படத்துக்கும் தனிச்சான்றிதழ் அளிக்க நடக்கம் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பயந்து உடந்தையாக இருக்கிறார்கள். திரைத்துறையில் உள்ள துணிவு உள்ள மனிதர்கள் குரல் கொடுத்தாலேயே அரசின் பாத்திரம் பொங்கி வழியும்

மக்கள் மந்தைகள் அல்லர் மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.