நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன், '’மு.க.ஸ்டாலின் கூறுவதைக் கேட்டு யாரேனும் கோலமிட்டால் அவர்களது குடும்பம் குளோஸ் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

பொய்யான குற்றச்சாட்டு பெயரில் பிரதமர் மோடியின் பெயரை கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு தமிழக மக்கள் இரையாகிவிடக் கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம்களை தூண்டி அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால்  பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சாதிக்காரர்கள் போராட களத்திற்கு வர நீண்ட நேரம் ஆகாது’’ என சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்தவரா இவ்வாறு பேசுகிறார் என பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 'சோலிய முடிச்சிருங்க' எனப் பேசுவது வன்முறையைத் தூண்டுவதென்றால் 'குடும்பம் குளோஸ்' என்பது நேரடி கொலைமிரட்டல் இல்லையா? வன்முறையைத் தூண்டுவது இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்