மீண்டும் மீண்டும் மேடைகளில் மற்றவர்கள் இந்துக்களைப்பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது, ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமதித்தது, உதயநிதி ஸ்டாலின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்க மறுத்தது போன்ற சம்பவங்கள் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு தி.மு.க வாழ்த்து கூட கூறவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் என்ற நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் என்கிற இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பங்குபெற்று பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா மேடையில் பேசினார். அப்போது அவர், பேசுகையில், "ஹிந்து என்ற மதமே கிடையாது. அனைவரும் சைவர்கள் தான். சைவர்கள் தான் தமிழர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள். ஹிந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதே நமக்கெல்லாம் பலவீனம். இந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரிகிறது", என்று பேசி இந்து மதத்தின் மீது வன்மமாக பேசியுள்ளார்.
அப்போது மேடையில் இருந்த கிறிஸ்தவ தலைவர்கள் சிரித்துக் கொண்டே கை தட்டினர். மு.க. ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். மத நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவது திமுகவினரையே கதிகலங்க வைத்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் மேடைகளில் மற்றவர்கள் இந்துக்களைப்பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 21, 2020, 5:25 PM IST