மாநிலத்தில் ஒரு இளம்பெண் மரணத்திற்காக தன்னுடைய அனுதாபத்தைக் கூட தெரிவிக்க மனம் இல்லாத திமுகதான் அரசியல் செய்கிறது. திமுக இன்னும் மாறவில்லை. திமுகவைப் பற்றி நான் மிக நன்றாக அறிவேன்’ என்று பதிலளித்தார் விஜயசாந்தி.
பாஜகவின் பெருமுயற்சியால் மறைந்த மாணவிக்கு நீதிகேட்டு நடத்தப்படும் அறப் போராட்டத்திற்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை ’ஒரே நாடு’ என்ற பாஜக கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளார். அதில், “தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவின்படி பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய தேசிய உயர்நிலை குழு அரியலூர் மாவட்டத்தில் மரணமடைந்த மாணவி லாவண்யா அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் தந்த அறிக்கையின் படி, சாலை வழியே வடுகன் பாளையம் கிராமத்திற்குச் சென்று மரணமடைந்த லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் தாயார் குடும்பத்தினரை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் தங்கியிருந்து உரையாடினர். முன்னதாக உயிர்நீத்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். உயர்நிலைக் குழுவினர் தேசியத் தலைவர் ஜெ .பி நட்டாவின் சார்பாக தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்குத் தெரிவித்தனர்.
குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு பேரில் சரளமாக தமிழில் உரையாடிய உறுப்பினர் விஜயசாந்தி அன்புடனும் ஆதரவுடனும் தாய் தந்தையரிடம் அவளுடைய மனத்தாங்கல் கேட்டறிந்தார். நடந்த சம்பவங்களை கோர்வையாக விஜயசாந்தியிடம் தெரிவித்தனர். தங்களை காவல்துறையும் இதர கட்சிகளும் பரிதவிக்க விட்டதை நீண்ட விளக்கமாகச் சொன்னதை குழு உறுப்பினர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். விரிவான அறிக்கையை தலைவர் நட்டாவிடம் தெரிவிப்பதாக மாணவியின் பெற்றோருக்கு தெரிவித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் பாரதிய ஜனதா கட்சிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
நிலைக் குழுவின் சார்பாக உறுப்பினர்கள் நால்வரும் என் குடும்பத்திற்கு தங்கள் அன்பையும் தங்கள் ஆதரவையும் தெரிவித்து உங்களுக்குப் பின்னால் இந்தியாவின் மிகப்பெரிய கட்சி இருக்கிறது எங்கள் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களின் அச்சத்தைப் போக்கி ஆதரவை தெரிவித்தனர். நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு உயர்நிலைக் குழுவினர் நால்வரும் வெளியே வந்ததும் அங்கே திரளாக வந்திருந்த ஊடக நண்பர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது குழுவின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பை விஜயசாந்தி, மாநில செயலாளர் வெங்கடேஷ் எதிர்கொண்டனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக இளம்பெண் மரணத்தை அரசியல் ஆக்கி அரசியல் ஆதாயம் தேடுகிறது என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்ததனர் . பாஜகவுக்கு மட்டும் இந்த மரணத்தில் என்ன அக்கறை என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த விஜயசாந்தி, ‘மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்றும் பெண்ணின் மரணத்தைப் பற்றி இதுவரை திமுக ஏன் வாய் திறக்கவில்லை .எந்த ஊடகமும் இதை விவாதப் பொருளாக எடுக்கவில்லை. நீங்களும் பிற கட்சிகளும் மௌனமாக இருப்பதால்தான் பாரதிய ஜனதா கட்சி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் பேசாவிட்டால் இந்த இளம்பெண் மரணத்திற்கு என்ன பதில்? இதுவரை ஏன் தமிழக முதல்வர் அவரின் ஆட்சியில் ஏற்பட்ட மரணத்திற்கு வாய் திறக்கவில்லை, அவர் மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? இதன்மூலம் பாஜக வுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கிறது என்று சொல்லத் தெரிந்த ஸ்டாலின், அரசியல் ஆதாயம் தேடுகிறார். கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை அவர் கட்சியைச் சேர்ந்த ஒரு நபரின் மகள் இதுபோல பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்காக பாரதிய ஜனதா கட்சி குரல் கொடுக்கிறது.
மாநிலத்தில் ஒரு இளம்பெண் மரணத்திற்காக தன்னுடைய அனுதாபத்தைக் கூட தெரிவிக்க மனம் இல்லாத திமுகதான் அரசியல் செய்கிறது. திமுக இன்னும் மாறவில்லை. திமுகவைப் பற்றி நான் மிக நன்றாக அறிவேன்’ என்று பதிலளித்தார். இந்நேரம் இந்த பரபரப்பான பேட்டி அனைத்து சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி தளங்களிலும் இன்னேரம் வெளியாகி இருக்கும். மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து திரும்பிய உயர்நிலைக் குழுவினர் பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றனர். உயர்நிலைக் குழு உறுப்பினர்களின் வருகைக்காக காத்திருந்த மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி இருவரையும் சந்தித்து தாம் கண்டறிந்த விவரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் தவறுகளையும் காவல்துறையில் கேட்டறிந்த குறைகளையும் பகிர்ந்து அதற்கான விளக்கங்களைக் கேட்டு அறிந்தனர்.

தேசிய தலைமையின் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்ட உயர்நிலைக் குழுவின் பயணம் மறைந்த மாணவியின் குடும்பத்திற்கு தன்னம்பிக்கையையும், ஊடகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியின் பெருமுயற்சியால் மறைந்த மாணவிக்கு நீதிகேட்டு நடத்தப்படும் அறப் போராட்டத்திற்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
