தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் அளித்த ஆர்டரின் அடிப்படையில் மும்பையில் 3 ஆயிரம் கிலோ இனிப்பு தயாராகி வருகிறது.

பாஜக வேட்பாளர் அளித்த ஆர்டரின் அடிப்படையில் மும்பையில் 2 ஆயிரம் கிலோ இனிப்பு தயாராகி வருகிறது. மும்பை வடக்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த ஆர்டரை அளித்துள்ளார். 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையிலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்து வரும் நிலையில், தனது வெற்றி வாய்ப்பும் உறுதி என்று பாஜக வேட்பாளர் கோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையின் போய்ராவலியில் உள்ள அந்த இனிப்புக்கடை நடத்திவருபவர் கூறுகையில், பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி 3 ஆயிரம் கிலோ இனிப்புகளை தயார் செய்யுமாறு ஆர்டர் அளித்துள்ளார். இதில் உற்சாகமடைந்த எனது ஊழியர்களும் மோடியின் முகமடி அணிந்து அவற்றை தயாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மும்பை வடக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாலிவுட் நடிகர் ஊர்மிளா மடோந்த்கர் போட்டியிடுகிறார்.