புல்வாமா தாக்குதலுக்கு பின்,பாஜகவிற்கு நாடு முழுவதும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதில் குறிப்பாக உத்திர பிரதேசத்தில் மட்டும் கூடுதலாக 12 தொகுதிகளில் வெற்றி பெரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இந்தியா டிவி மற்றும் CNX நிறுவனம் இரண்டும் சேர்ந்து நடத்திய இந்த கருத்து கணிப்பில் தான் இந்த விவரம் வெளியாகி உள்ளது. அதன் படி, புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் உத்திர பிர்ரதேசத்தில் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியயா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி மற்றும் மோடியின் செல்வாக்கை உணர்ந்த மக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, புல்வாமா தாக்குதலுக்கு பின் 41 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும். அப்படி பார்த்தால் இப்போது 12 தொகுதிகள் உயர்ந்துள்ளது. இருந்தாலும், கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக் தளம் மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம். ஆனாலும் பாஜகவிற்கு ஆதரவு பெருகி உள்ளது பார்த்து காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.