Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்கத்தில் பாஜக அவுட் ஆயிடும்... தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான்... சரத்பவார் தாறுமாறு கணிப்பு..!

தமிழக மக்கள் திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆதரவு தருவார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
 

BJP will be out in West Bengal... DMK will be the next government in Tamil Nadu... Sarathpavar is expected to change..!
Author
Mumbai, First Published Mar 15, 2021, 8:28 AM IST

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி  ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். “கேரளாவில் தேசியவாத காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணியில் உள்ளது. எனவே, அங்கே பெரும்பான்மையுடன் நங்கள் வெற்றி பெறுவோம். தமிழக மக்கள் திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆதரவு தருவார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் திமுகவே ஆட்சிக்கு வரும். BJP will be out in West Bengal... DMK will be the next government in Tamil Nadu... Sarathpavar is expected to change..!
மேற்கு வங்கத்தில் பாஜக மம்தா பானர்ஜியை அழிக்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இத்தேர்தல் வங்கத்தின் பெருமை மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்பதால், ஒட்டு மொத்த மாநிலமும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் அணிவகுக்கும். மம்தா பானர்ஜியின் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அஸ்ஸாமில் மட்டும் பாஜக வலுவாக உள்ளதாகத் தெரிகிறது. BJP will be out in West Bengal... DMK will be the next government in Tamil Nadu... Sarathpavar is expected to change..!

அதிகபட்சம் அஸ்ஸாமில் மட்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும். மற்ற மாநிலங்களில் தோல்வியைச் சந்திக்கும். மற்ற கட்சிகளே அங்கு ஆட்சியைப் பிடிக்கும். இந்தத் தேர்தல் முடிவு நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்லும்” என்று சரத்பவார் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios