பிரதமர் மோடி மற்றும் பாஜக  தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்த முறையும் எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என துடியாய் துடித்து வருகின்றனர்.

அதற்காக பல வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி அமைத்தல் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களில் பாஜகவின் பெயர் டேமேஜாகிக் கிடக்கிறது.

அதே நேரத்தில் மிஷின் சக்தி பிரச்சனையை முன்வைத்து மோடி அடித்த சிக்ஸர், ஹிட் அடிப்பதற்குள் ராகுல் காந்தி 5 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ரூபாய் வழங்குவோம் என  உறுதி அளித்தது நாடு முழுவதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில் தான் தனியார் நிறுவனங்கள் மற்றும் புனாய்வுத் துறை  மூலம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் நாடு முழுவதும் பாஜகவுக்கு 240 தொகுதிகள் கிடைக்கும் என பாஜக கணக்கு போட்டு வைத்திருந்த நிலையில்  தற்போது வெறும் 190 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

கூட்டணிக் கட்சிகள் மூலம் 40 தொகுதிகள் கிடைத்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான  பெரும்பான்மை கிடைக்காது என்பது தான் தற்போதைய நிலைமை என புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதால் பாஜக முக்கிய தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.