குருமூர்த்தி கார்ட்டூன் கலாய், சி.பி.ராதாகிருஷ்ணன் படு தோல்வி, சிவி சண்முகத்தின் பிஜேபி மீதான அட்டாக், ராஜன் செல்லப்பா மூலம் ஓபிஎஸ்ஸை டார்கெட் பண்ணது என அமித்ஷாவை டென்ஷனாக்கிவிட்டது. அமித்ஷாவின் இந்த கோபத்தை நேரடியாக பார்த்தது கொங்கு மண்டல அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும்தான்.

பெருசா ஏதாவது சம்பவம் நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம், உப்பு சப்பில்லாமல் முடிந்திருக்கிறது. இதற்கு காரணம் பிஜேபியின் கோபமும், அதிமுகவின் சமீபத்திய பிஜேபி மீதான அட்டாக்கும் தான் காரணம் என சொல்கிறார்கள் டெல்லிக்கு அதிமுகவுக்கும் மீடியேட்டராக இருக்கும் சில முக்கிய புள்ளிகள். 

ஆழ்வார் பேட்டையில் நடந்த அந்த கூட்டத்தில்,  கூட்டம் தொடங்கும் முன்பே சூடாக வந்த நிர்வாகிகளை கூல் செய்ய ஐஸ்க்ரீம், நேரம் ஆக அக மிக்சர், காரத்தை சரிக்கட்ட ஸ்வீட்  கடைசியாக காபி, டீ என கூட்டம் முடியும் வரை கேள்வியே கேட்க முடியாதபடி வாய்க்கு வேலை கொடுத்துள்ளனர். கூட்டம் தொடங்கியதிலிருந்து இ.பி.எஸ்.,  கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம், மட்டுமே பேசிவிட்டு வணக்கம் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
 
கூட்டம் போடுவதற்கு முன்பு, ட்ரெண்டிங்கில் இருந்த  ராஜன்செல்லப்பா, ஐஸ்கிரீம் சாப்பிடக் கோடா வாய் திறக்கவில்லையாம்,  குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வைத்தியம் பாக்க போவதாக எஸ்கேப், அதேபோல சீவி சண்முகமும் தனது அண்ணன் மகன் விபத்தில் சிக்கியதால் சிகிச்சை பெற்றுவரும் போரூர் ராமச்சந்திர மருத்துவமனையில் இருந்துவிட்டாராம். 

பயங்கர சம்பவம் நடக்குமென எதிர் பார்த்த நிலையில், இப்படி கப்சிப் காரணம் கேட்டால் குருமூர்த்தி தனது துக்ளக் பத்திரிகையில் அதிமுகவை கிண்டலடித்து போட்ட கார்ட்டூனை கண்டித்து நமது அம்மாவில் கலாய்த்து கண்டமாக்கியது,  ராஜன் செல்லப்பா, குன்னம் எம்.எல்.ஏ. வைத்து ஓ.பி.எஸ்.சை டார்கெட் பண்ணி ஒற்றைத் தலைமை மேட்டர் பேசி குழப்பத்தை உண்டாக்கி கும்மியடித்து டெல்லியை கடுப்பாக்கியதாம்.


 
இதனால், நாங்கள் நினைத்தால்  பன்னீரையே மீண்டும் முதல்வராக்குவோம். எடப்பாடியோடு இருக்கும் மொத்த எம்.எல்.ஏ.க்களையும் வளைக்க எங்களால் முடியும் என மிரட்டியதோடு மட்டுமில்லாமல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் அவசர அவசரமாக டெல்லிக்கு வரவழைத்தாராம் அமித்ஷா. இதற்குப் பின் தான் கூட்டத்தில் எந்த வில்லங்கமான விவாதமும் வரக் கூடாது என்பதால்,  டெல்லி உத்தரவிட்டபடியே செம சைலண்ட்டாக கூட்டத்தை எடப்பாடி நடத்திவிட்டு,  கோபமாக இருந்த அமித்ஷானை கூலாக்க,  டெல்லி சென்று கவர்னரை சந்தித்து விட்டு வந்தாராம் எடப்பாடியார்.

அதிமுக மீதான கோபத்தை  அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் தான் காட்டியுள்ளார் அமித்ஷா. காரணம்? கோவை பாராளுமன்றத் தொகுதி பிஜேபி  வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், சூலூர் தொகுதியில் திமுக. வேட்பாளரை விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றார். சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுமார் 30ஆயிரம் ஒட்டு வித்தியாசம் அதிகமானது எப்படி? என கொங்கு மண்டல அமைச்சரான வேலுமணியிடம் கேட்டாராம். பிஜேபி வெற்றியில் அதிமுக இடைத்தேர்தல் வெற்றிக்காக காட்டிய. அக்கறையை  பிஜேபி வேட்பாளருக்கு காட்டாது தானாம்.