Asianet News TamilAsianet News Tamil

தாமரை கூட வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு அல்லி?!... - பாஜக பண்ணும் அலப்பறை..!!

bjp trying to to enter TN politics
bjp trying-to-to-enter-tn-politics
Author
First Published May 1, 2017, 4:44 PM IST


பா.ஜ.க.வின் தேசிய எதிரி காங்கிரஸ், பிராந்திய எதிரிகள் தி.மு.க., மார்க்சிஸ்ட், திரிணமுல்காங்கிரஸ், சமாஜ்வாடி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இந்த நிமிடமே அதை அழிரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள். பா.ஜ.க.வின் பக்கா எதிர்கள் அக்கட்சியின் நிர்வாகிகளேதான்.

பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகளுக்கு வாய் நீளமென்பதை மோடியும், அமித்ஷாவுமே பல முறை தங்களது கண்டன வார்த்தைகளின் மூலம் சுட்டிக்காட்டி திருந்த சொல்லியிருக்கிறார்கள்.

ஏதோ திருவள்ளுவரின் சித்தப்பா வீட்டில் பிறந்து, அவ்வையாரின் கையால் அ, ஆ, இ, ஈ...எழுத கற்றவர் போல் தமிழ் தமிழ் என்று உருகிய தருண்விஜய்யே சமீபத்தில் தமிழர்களின் நிறத்தை பற்றி மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடித்தது.

bjp trying-to-to-enter-tn-politics

இதுபோல் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பஞ்சாயத்து வெடிப்பது வழக்கமாகி இருக்கிறது.  இதனாலேயே மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு ஆங்காங்கே செல்வாக்கு சரிவு கடுமையாக ஏற்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் மத்தியமைச்சர் பொன்னார் ‘தி.மு.க. இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.’ என்று ஸ்டாலினை விமர்சித்த வேளையில் கூடவே எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்றும் ஒரு பிட்டை போட்டுவிட்டு நகர்ந்தார். 

இதில் பா.ஜ.க.வின் மாநில தலைமை காண்டாகிவிட்டதாம். தனித்து போட்டி, கூட்டணி அமைத்து போட்டி என்பதெல்லாம் மத்திய தலைமையுடன் மாநில தலைமை பேசி முடிவெடுத்து, மாநில தலைவரால் அறிவிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

bjp trying-to-to-enter-tn-politics

இதில் இவர் தலையிடுவதும், கூட்டணி இல்லை என்று அறிவிப்பதும் எந்த விதத்தில் நியாயம்? சமீபத்தில் ரத்தான உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணி விஷயத்தில் கட்சி ஒரு முடிவில் இருந்தது. ஆனால் இப்போது அரசியல் சூழல்கள் தமிழகத்தில் தாறுமாறாக மாறி நிற்கிறது.

ஆகவே இனி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் போது தலைமை வேறு முடிவெடுக்கலாம். சூழல் இப்படியிருக்க இவரெப்படி தனித்துப் போட்டி என்று அறிவிக்கலாம்? என்று தலைமை வரை  பஞ்சாயத்தை கொண்டு போனார்களாம். 

மாநில தலைமையின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதென்று டெல்லி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

கூடவே சமீபத்தில் மத்திய  அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவை மண்டலம் வந்தபோது மோடியின் புகைப்படமில்லாமல் அவரது படம் மட்டுமே போடப்பட்டு வரவேற்பு டிஸைன்கள் வாட்ஸ் அப்களில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு பரிமாறப்பட்டதாம்.

ஆக்சுவலி ஸ்மிருதிக்கும் இந்த கூத்துகள் தெரியாதாம். இந்த விஷயத்திலும் மாநில நிர்வாகி ஒருவரின் பெயரை இழுத்துவிட்டு டெல்லிக்கு புகார் போயிருக்கிறது. 

bjp trying-to-to-enter-tn-politics
ஆக தமிழக பா.ஜ.க.வில் மாநில நிர்வாகிகளுக்குள்  தொடர்ந்து முரண்பாடுகளும், கருத்து மோதல்களும், புறக்கணிப்புகளும் நடைபெறுவதை சுட்டிக் காட்டிய தலைமை, ‘இது நல்லதல்ல’ என்று எச்சரித்திருக்கிறதாம்.

மாநில தலைமையின் கவனத்தோடே எல்லாம் செய்யுங்கள் என்றும், தேசிய பொறுப்பில் உள்ள தமிழக பா.ஜ.க. முக்கியஸ்தர்கள் பொது விஷயங்களில் வார்த்தைகளை கொட்டும்போது மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுருத்தி இருக்கிறதாம். அப்படியில்லாமல் கண்டதையும் பேசி, தமிழக மக்களிடையே பா.ஜ.க. மீது வெறுப்பு உருவாகும் சூழல் வந்தால் மிக மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனி சர்க்குலர் வழியாக எச்சரித்திருக்கிறது டெல்லி. 
டெல்லியே எச்சரித்த பிறகு இனி கட்டுப்பாடோடு இருப்பார்கள்தானே! என்று நீங்கள் நினைத்தால் அது பெரிய தவறு. எப்படி என்னை பற்றி டெல்லி வரை புகார் சொல்லலாம்? எனக்கென்ன அதிகாரமில்லையா? என் மண்டலத்தில் நான் அரசியல் செய்யக்கூடாதா?

கட்சி சார்பாக ஒரு சமயோசித முடிவை அறிவிக்கும் அதிகாரம் எனக்கில்லையா? என்று அவரவர்கள் தங்களின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கொதித்து, அதன் வழியாகவே எதிரணிக்கு காட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்களாம். 

இவிய்ங்களுக்குள்ளேயே இவிய்ங்க இப்படி சண்ட போட்டுட்டு இருந்தா கட்சிய எப்படிங்க வளர்த்து, ஆட்சிய புடிக்க வைக்கிறது? என்று புலம்பிக் கொட்டுகிறார்கள் நடுநிலை சீனியர்கள். 

ஆக போகிற போக்கை பார்த்தால் தமிழகத்தில் தாமரை மலராவிட்டாலும் பரவாயில்லை, அட ஒரு அல்லியாவது முளைக்குமா? என்பதுதான் கேள்வி. 

Follow Us:
Download App:
  • android
  • ios