தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் என்கிற பேச்சை உண்மையாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் பொருட்டு தென்னிந்திய அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்க  முயற்சித்து வருகிறார். அதன் அடிப்படையில் கேரளா முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்திரசேகர ராவ் சந்திக்கிறார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து அப்போது ஆலோசிக்க உள்ளனர்.

 

இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் சந்திரசேகரராவ் சுமார் ஒருமணி நேரம் பேசி உள்ளனர். அதன் பிறகு மே 13ம் தேதி சந்திரசேகரராவ், மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க, சந்திரசேகர ராவ் முயன்றார்.

ஆனால் மூன்றாவது அணி அமைக்க சந்திரசேகரராவ் முயற்சிக்கவில்லை. மாறாக பாஜக இவரை பின்னாள் இருந்து இயக்குகிறது. மறைமுகமாக பாஜக கூட்டணி குறித்து பேச சந்திரசேகரராவை அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே பாஜக அனுப்பும் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்திக்க உள்ளார். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்கவே இந்த தூது  அமைந்துள்ளது என்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவரும் மாநில கட்சியினரை சந்தித்து வருகிறார். பாஜக திமுகவுக்கு தூது விடுவதால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.