தான் இப்போதைய அரசியல் டார்க்கெட். அப்படித்தான் மத்திய அரசின் கஜா புயல் நிவாரண ஒதுக்கீட்டையும், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பையும் இணைத்து பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

கஜா புயல் நிவாரண நிதியாக நேற்று ரூ.1,146யை மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என சம்பந்தமே இல்லாமல் பேசிய திடீர் பேச்சும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு காலம் அமைதியாக  இருந்துவிட்டு இப்போது ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி பேசுகிறாரே என பலரும் சந்தேகத்தை கிளப்பினர். அதை தொடர்ந்து சில மணி நேரத்தில் வந்த இடைத்தேர்தல் அறிவிப்புகளை பொறுத்திப் பார்க்கும்போது இது எல்லாம் சொல்லி வைத்து நடக்கும் காரியமாக இருப்பது போன்றே தோன்றியது.

கஜா புயல் நிவாரணத்தை அறிவித்த பிறகே இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதனால் பாஜக இந்த நிவாரண தொகை அறிவிப்பை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொள்ளும். அடுத்து எய்ம்ஸ், பெட்ரோல் விலை குறைவது போன்றவற்றையும் திருவாரூரில் கையாளும். அதேபோல அதிமுக, சசிகலா குடும்பத்தினர் மீதான இட்லி, சொகுசு விடுதி போன்ற வார்த்தை பிரயோகங்கள் அதிகம் இருக்கும்.

டி.டி.வி.தினகரனை அடியோடு அட்டாக் செய்ய அதிமுக ஜெயலலிதா மர்ம மரணம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து அதை முன்னிறுத்தியே பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இந்த தாக்குதலை எப்படி சமாளித்து வெற்றி டி.டி.வி.அணி எப்படி பெறுகிறது எனப் பார்த்து விடலாம்’’ என சவால் விட்டு வருகிறது எடப்பாடி அணி.