கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால், அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். “ கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளுக்கு 'சன்மான் நிதி' முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதேபோல வங்கிகளில் 'ஜன்தன்' வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


தற்போது நவம்பர் மாதம் வரை ரேஷனில் ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வர வேண்டும்.
கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் நியாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.