bjp spies palnning to stop rk nagar election
ஆர்.கே.நகரில் பண விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆனால், எதுவும் ஆதாரம் இல்லாத புகாராக இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது தேர்தல் ஆணையம்.
அதற்காக, பண விநியோகத்தை ஆதாரத்துடன் கண்டுபிடிக்கும் பணியில் திமுகவும், பாஜக வும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை பண விநியோகத்தை அம்பலப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால், பண விநியோகத்தை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதே பாஜகவின் திட்டமாக உள்ளது.

தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதை நிறுத்துவது என்பது சாத்தியமில்லை என்பது அதிமுக-வின் கருத்து.
ஆனால், எப்படியும் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதற்காக, கையில் ரகசிய கேமராவுடன் காவி உடை உடுத்திய உளவாளிகள் பலரை ஆர்.கே.நகருக்கு பாஜக அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனால், ஆர்.கே.நகரில் தேர்தலுக்குள் என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறப் போகிறதோ? என்று ஆர்வத்துடன் பிரேக்கிங் நியூஸ் போட தயார் நிலையில் காத்திருக்கின்றன ஊடகங்கள்.
