அய்யோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்து சிறுபான்மையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இருக்கு... ஆனா இல்ல... இதுதான் அய்யோத்தி வழக்கின் நிலவரம். இந்திய  நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடிய வழக்காகவும், தீர்வு காண  (நாட்டமில்லாமல்) முடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கும்  வழக்கு எது என்றால் அது அய்யோத்தி வழக்காகத்தான் இருக்கும். காரணம் அத்தனை சிக்கல்கள், நாடே இரண்டாகும் அளவிற்க்கு அப்படி ஒரு உணர்வு பூர்வமான விவகாரம் அது. தீர்ப்பு கொடுப்பதைவிட கொடாமல் இருப்பதே உத்தமம் என்று நீதிமன்றமே மவுனம் காக்கும் தவ நிலை. ஆனால் இப்படிப்பட்ட விவகாரத்தில்  தற்போது தடாலடியாக கருத்துக்கூறி அனைவர் நெஞ்சிலும் அணுகுண்டு வீசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. 

ஆதாவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்பதுதான் அந்த குண்டு. தனது பிறந்த நாளான கடந்த சனிக்கிழமை ஆய்யோத்திக்குச் சென்று பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்குச் சாதமாகவே தீர்ப்பு வரும் என தான் நம்புவதாக தெரிவித்தார். வழிபாட்டு உரிமையென்பது அடிப்படை உரிமை என்ற அவர், அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது எனவும் கூறினார்.

 ராம பிரான் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கோயிலை அகற்ற முடியாது என தெரிவித்த சுப்ரமணியன் சாமி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார் அதை தான் உறிதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அவரின் கருத்தை நடுநிலையாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.