அமித்ஷா இடத்தை நிரப்பும் நட்டா...!! பாஜகவில் நடக்கிறது அதிரடி மாற்றம்...!!

அமித்ஷா கோலோச்சிய பாஜக தேசிய தலைவர் பதவியில் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜேபி நட்ட வரும் 22ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன . 

bjp senior leader jp natta will swearing as bjp national president  feb 22 replace for amith sha

அமித்ஷா கோலோச்சிய பாஜக தேசிய தலைவர் பதவியில் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜேபி நட்ட வரும் 22ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன . அமித்ஷா உள்துறை அமைச்சரானதை அடுத்து ஜேபி நட்டாவுக்கு தலைவர் பதவி வாய்ப்பு வழங்கப்படுகிறது .  பாஜக தலைவரின் பதவி என்பது அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது ,  வாஜ்பாய் ,  அத்வானி , அமித்ஷா என மிகப் பெரிய ஆளுமைகள் அப்பதவியில் கோலோச்சி பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர் .  எனவே பாஜகவின்  முடிவுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பதவியாக பாஜக தலைவர் பதவி கருதப்படுகிறது.

bjp senior leader jp natta will swearing as bjp national president  feb 22 replace for amith sha 

 பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா தேர்தல் வியூகங்களை வகுப்பதில் மிக வல்லவராக இருந்ததின் காரணமாக ,  அவருக்கு அந்த பதவி மிகவும் பொருத்தமாக இருந்தது  இந்நிலையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததையடுத்து தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்  உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் .  அதிலிருந்து பாஜக தேசிய தலைவர் பதவி  நிரப்பப்படாமலேயே  இருந்தது .  இந்நிலையில் சரியான தலைவரை நியமிக்க வேண்டும் என மோடி அமித்ஷா காத்து வந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜே பி  நாட்டாவை  பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நட்டா முதன்முதலில் பாஜக இளைஞரணி பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தவர் ஆவார் .  அதன்பிறகு 2014ஆம் ஆண்டு அவருக்கு தேசிய தலைமை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது . 

bjp senior leader jp natta will swearing as bjp national president  feb 22 replace for amith sha

அதன்பின்னர் பாஜக நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ,  அமித்ஷா அமைச்சா் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது , எனவே அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக நட்டா இருப்பார் என்பதாலும் அனைத்து தரப்பு தலைவர்களையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்பதாலும் ஜேபி நட்டாவை தேசிய தலைவராக நியமிக்க அக்கட்சியினர்  ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .  ஜேபி நோட்டாவின் பூர்வீகம் இமாச்சலப்பிரதேசம் என்றாலும் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பீகார் மாநிலம் பாட்னாவில் தான் . நட்டா ஆர்எஸ்எஸ் அரசியலை அடிப்படையாக கொண்டவர் ஆவார்... 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios