அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜக தரப்பில் தங்களுக்கு தூது அனுப்பப்பட்டதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார். 

அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜக தரப்பில் தங்களுக்கு தூது அனுப்பப்பட்டதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக கன்னியாகுமரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது அனுப்பினார். திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் அமமுக சார்பாக சிறுபான்மையினரை நிறுத்த பாஜக எங்களை அணுகியது. கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக என்னிடம் தூது அனுப்பினார்.

ஆனால் நாங்கள் பொன்னாரை இதுவரை நேரடியாக சந்திக்கவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. கருப்பு முருகானந்தம் எனது சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர். அந்த வகையில் அவரை அனுப்பி வைத்தனர். சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும் பரவாயில்லை. கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை அமமுக சார்பாக நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் நெருக்கடி கொடுத்தனர்.

இது போல பல்வேறு நிர்பந்தங்கள் எனக்கு பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அம்மாவின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமே நாங்கள் அடிப்பணிவோம்’’ என அவர் தெரிவித்தார். கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.