Asianet News TamilAsianet News Tamil

இனி கிண்டல் மீம்ஸ் போட்டால் அவ்ளோதான்... மீம்ஸ் கிரியேட்டர்களைக் குறி வைக்கும் பாஜக?

மீம்ஸ் வெளியிடுவோரை கண்காணித்து சட்ட நடவடிக்கை எடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக நாடு முழுவதும் பாஜக சார்பில் ஒவ்வொரு தாலுகா அளவிலும் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஒன்றை உருவாக்க கட்சி மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 

Bjp plan to take action against memes creators
Author
Chennai, First Published Jun 2, 2019, 8:30 AM IST

பாஜக தலைவர்கள், அக்கட்சியின் செயல்பாடுகளை கேலி, கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான குழுக்களை அமைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.Bjp plan to take action against memes creators
சமூக ஊடகங்கள் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. தங்கள் ஆதரவு, எதிர்ப்பு, வெறுப்பு என பலதரப்பட்ட எண்ணங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் வெளிப்படுத்திவருகிறார்கள். இதன்காரணமாகவே சமூக ஊடகங்களில் கட்சிகளும் ஓர் அணியை ஏற்படுத்தி தங்கள் பிரசாரங்களை செய்துவருகின்றன. சில நேரத்தில் இதுபோன்ற எண்ணங்களும் பிரசாரங்களும் எல்லை மீறி போவதும் உண்டு.Bjp plan to take action against memes creators
இந்நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடங்களில் தங்கள் கட்சிக்கு எதிராகவும் தலைவர்களுக்கு எதிராகவும் வெளியிடப்படும் மீம்ஸ்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதன்படி மீம்ஸ் வெளியிடுவோரை கண்காணித்து சட்ட நடவடிக்கை எடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக நாடு முழுவதும் பாஜக சார்பில் ஒவ்வொரு தாலுகா அளவிலும் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஒன்றை உருவாக்க கட்சி மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Bjp plan to take action against memes creators
அக்குழுவினர் சமூக ஊடங்களைக் கண்காணித்து தங்கள் பகுதியில் கட்சித் தலைவர்களை கேலி, கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிவோரை கண்டறிந்து சட்ட ரீதியாக தண்டனை வெற்று தர நவடிக்கை எடுப்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios