Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலை அசந்த நேரத்தில் பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக.. குஷியில் இபிஎஸ்..!

அண்ணாமலை  சந்தோஷம் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரை எடப்பாடி பழனிசாமி தட்டித்தூக்கியுள்ளார். 

bjp obc wing state secretary thangaraj join AIADMK TVK
Author
First Published Nov 3, 2023, 2:42 PM IST | Last Updated Nov 3, 2023, 2:42 PM IST

தமிழக பாஜகவின் ஒபிசி அணியின் மாநிலச் செயலாளர் தங்கராஜ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழக பாஜக மாநில ஓபிசி அணி தலைவரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில், பாஜக சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவிற்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். 

bjp obc wing state secretary thangaraj join AIADMK TVK

இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் இருந்து தான் விலகுவதாக கூறி திருச்சி சூர்யா அறிவித்தார். இதனையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்த சூர்யா சிவா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

bjp obc wing state secretary thangaraj join AIADMK TVK

 உடனே உஷாரான அண்ணாமலை அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து அவர் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடரலாம் என தெரிவித்தார். இதனால் அண்ணாமலை  சந்தோஷம் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரை எடப்பாடி பழனிசாமி தட்டித்தூக்கியுள்ளார். தமிழக பாஜகவின் ஒபிசி அணியின் மாநிலச் செயலாளர் தங்கராஜ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios