காவிரிக்காக 44 வருஷங்கள் காத்திருந்த நிலையில் 40 நாட்கள் காத்திருப்பதால் ஒன்றும் குடிமுழுகிப்போகாது என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகம், தமிழகம், புதுவை, கேரளம் ஆகியவற்றிற்கிடையே பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை நிலவி வருகிறது. காவிரி நீரை ஒழுங்குப்படுத்த திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்கு செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மோடி ஹெலிகாப்டரில் வந்தால், ஹெலிகாப்டர் பார்த்து கும்பிடுறதுக்கு ஒரு கட்சி இருக்கு. ஹெலிகாப்டருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு கட்சி இருக்கு. ஆக இது எல்லாம் தமிழக
மக்களை ஏமாற்றுவதற்கான செயலாகும் என்றார்.

காவிரி விவகாரத்தில் 44 வருடங்கள் ஆகியிருக்கும். 40 நாட்களில் ஒன்றும் குடிமுழுகிப்போகாது. 40 நாட்கள் அவகாசம் கேட்டதற்கு கலவர பூமியாக்குவதா? என்று கேள்வி எழுப்பினார்.

40 நாட்கள் காத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயமாக தமிழகத்துக்கு முழு நியாயம் வழங்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறினார்.