அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் முதல் திமுக எதிர்ப்பு என்பது தீவிரமடைந்துள்ளது.

திமுக அமைச்சர் காந்தி பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசியதற்கு எம்எஎல்ஏ வானிதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அரியணையில் ஏறியுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே பாஜகவுக்கும் -திமுகவுக்கும் இடையேயான மோதல் இருந்து வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே தங்களின் நோக்கமென பாஜக முழங்கினாலும், அதிமுகவை காட்டிலும் திமுக மீதான அதன் பகை அதிகமாக உள்ளது. குறிப்பாக அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் முதல் திமுக எதிர்ப்பு என்பது தீவிரமடைந்துள்ளது. 

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்த கேள்வியை திமுக அமைச்சரான காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் ஒருமையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காந்தி கூறுகையில்;- அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுற நீ. அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான். 

ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அதைப் பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தையைக்கூட பேசக் கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்தத் தைரியத்தில் பேசுகிறான். மத்தியில் அரசு இருக்கு என்று பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக் கூடாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார். அனைவருக்குமாான நல்லாட்சி, மக்களாட்சியை அவர் வழங்கி வருகிறார். முடிந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் புண்படாத வகையிலேயே நடந்துக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார். இவர் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த பேச்சுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பேசுபவர், தரத்தோடு பேசுகிறார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதை விட்டு அவன், இவன் என பேசும் இவர் மாண்புமிகு??? என கேள்வி எழுப்பியுள்ளார்.