நீங்கள் காதலிக்கும் பெண் யாரென்று மட்டும் கூறுங்கள், அந்த பெண் யாராக இருந்தாலும் கடத்தி வந்து உங்களிடம் கொடுக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது
நீங்கள் காதலிக்கும் பெண் யாரென்று மட்டும் கூறுங்கள், அந்த பெண் யாராக இருந்தாலும் கடத்தி வந்து உங்களிடம் கொடுக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காட்கோபர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராம் கதம். வடமாநிலங்களில் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்ட கிருஷ்ணஜெயந்தி பண்டிகையின் போது, உரிஅடித்தல் நடந்தது. 
அந்த நிகழ்ச்சிக்குப் பின், எம்.எல்.ஏ. ராம் கதம் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு குறித்த வீடியோ வெளியாகி பெரும் அரசியல் விவாத பொருளாக மாறி இருக்கிறது. அவர் பேசியதாவது: " நீங்கள் எப்ப வேணும்னாலும் என்னை செல்போனில் கூப்பிடுங்க. எனக்கு கால் செஞ்சு, நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அதற்கு உங்களுடைய உதவி தேவை என்று மட்டும் சொல்லுங்க போதும், மற்றதை நான் பார்த்துக்கிறேன்.
உங்கள் காதலைப் பற்றி உங்கள் பெத்தவங்கிட்ட பேசுகிறேன், அவங்க சம்மதிச்சட்டா, அந்த பெண்ணை அவர்களுக்கு பிடித்துவிட்டால், அவள் யாராக இருந்தாலும் உங்களுக்காக நான் கடத்தி கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கிறேன். என்னுடைய செல்போன் எண்ணை குறிச்சுங்க" என்று தெரிவித்தார்.
எம்எல்ஏ ராம் கதம் பேசிய வீடியோவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியானதும் தனது கருத்தை நியாடப்படுத்தி பேசிய எம்எல்ஏ ராம் கதம், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியோர் நெருக்கடி கொடுத்தவுடன் நான் இதுபோன்ற கருத்தை கூறவில்லை. என்பேச்சை மக்கள் திரிக்கிறார்கள். நான் பேசாத பேச்சுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று திடீரென பல்டி அடித்தார். 
எம்எல்ஏ ராம் கதம் குறித்த பேச்சு குறித்து மாநில பாஜக தலைமை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்ாமல் மவுனமாக இருக்கின்றனர். என்ன நடவடிக்கை பாயப்போகிறதோ தெரியவில்லை.
