கர்நாடகத்தில் மதசார் பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து . 17 எம்.எல். ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் காரணமாக மத சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

இதையடுத்து எடியூரப்பா முதலமைச்சராப பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி கர்நாடகாவில்  15 சட்டசபை தொகுதிகளுக்கு  இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில்  பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.  இதில், 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

15 தொகுதிகளில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும். இல்லாவிட்டால் அங்கு தற்போதைய அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். 

ஆனால் பாஜக 7 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.