Asianet News TamilAsianet News Tamil

தமிழக சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.. 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவுக்கு கிடைத்த தலைவர் வாய்ப்பு!

தமிழக சட்டப்பேரவை பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

BJP leader Nainar Nagendran has been elected to the Tamil Nadu Legislative Assembly..!
Author
Chennai, First Published May 9, 2021, 9:24 PM IST

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக,  நெல்லை, மொடக்குறிச்சி, கோவை தெற்கு, நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவர்களில் சட்டப்பேரவை பாஜக தலைவரை தேர்வு செய்ய அக்கட்சியின் பொறுப்பாளர் சிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் எம்.எல்.ஏ.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லையில் வெற்றி பெற்ற கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.BJP leader Nainar Nagendran has been elected to the Tamil Nadu Legislative Assembly..!
தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் இடம் பெறுவது இது மூன்றாவது முறையாகும். 1996-இல் பத்மநாபுரம் தொகுதியில் பாஜக சார்பில் வேலாயுதம் என்பவர் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் முதன் முறையாக நுழைந்தார். 2001-இல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக, மயிலாப்பூர், காரைக்குடி, தளி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது சட்டப்பேரவை பாஜக தலைவராக மறைந்த கே.என்.லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம் பெறுகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios