Asianet News TamilAsianet News Tamil

திடீரென திமுக ஆட்சியை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை..!

திமுகவின் 100 நாள் ஆட்சி செயல்பாடுகள் ஆறு மாதத்திற்கு பிறகு தான் தெரியும். 

BJP leader Annamalai suddenly praised DMK rule
Author
Tamil Nadu, First Published Aug 12, 2021, 2:27 PM IST

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

’’தமிழ்நாடு பா.ஜ.க 75வது சுதந்திர தின விழாவை மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்கள் இடங்களுக்கு, 75 பாஜக நிர்வாகிகள் சென்று வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளது. அதேபோல், 1104 இடத்தில் மாணவ-மாணவியர்கள் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளது. வரும் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் 'மக்கள் ஆசி வேண்டி' என்ற யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற உள்ளது. கோவையில் தொடங்க உள்ளது.BJP leader Annamalai suddenly praised DMK rule

எல்.முருகன் ராஜ்யசபா எம்.பியாக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரியாது. 6 மாதத்தில் எல்.முருகனை ராஜ்யசபா எம்.பி யாக  வேண்டும் என்பதால் ராஜ்யசபா எம்.பி. தேர்வினை பாஜக தலைமை முடிவு செய்யும். திமுகவின் 100 நாள் ஆட்சி செயல்பாடுகள் ஆறு மாதத்திற்கு பிறகு தான் தெரியும். ஒரு ஆட்சியின் செயல்பாடு குறித்து முழுமையாக பேச முடியும். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

BJP leader Annamalai suddenly praised DMK rule

ராகுல் காந்தி தொடர்ச்சியாக பொய் செய்திகளை வெளியிட்டார். அதனால் அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டரை அரசியலை ஆக்கியது காங்கிரஸ் கட்சி தான். அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடர்கிறது. கூட்டணியில் குழப்பமில்லை. உள்ளாட்சி தேர்தல் குறித்து குழு அமைத்து உள்ளோம். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராக வருகிறது.BJP leader Annamalai suddenly praised DMK rule

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை குறித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகே முழுமையாக பேச முடியும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios