Asianet News TamilAsianet News Tamil

இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சி பாஜக... தமிழகத்தில் அதை நிரூபிப்போம்... தெறிக்கவிடும் அண்ணாமலை..!

தெலங்கானா, பீஹார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சியில் பாஜக முதலிடத்தில் உள்ளது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

BJP is the party that Islamists want ... We will prove it in Tamil Nadu ...
Author
Coimbatore, First Published Feb 3, 2021, 9:54 PM IST

தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஆனால், கூட்டமாகச் சேர்ந்தால், போலீஸை பயமுறுத்த முடியும் என நினைக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் பிரதமரைத் தவறாகச் சித்தரித்து ஊர்வலம் நடந்தபோது போலீஸ் ஏதும் சொல்லவில்லை. இதுபோன்ற விஷயங்களைத் தடுப்பதில் போலீஸார் உறுதியாக இருக்க வேண்டும். போலீஸார் உறுதியாக இருந்திருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது.

BJP is the party that Islamists want ... We will prove it in Tamil Nadu ...
தெலங்கானா, பீஹார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சியில் பாஜக முதலிடத்தில் உள்ளது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். ஏனெனில், பாஜக அரசுதான் அவர்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறது. அதனால்தான் சில அமைப்புகள் பயப்படுகின்றன. அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் பிரதமரை விமர்சிப்பதும் தவறு அல்ல. ஆனால், அதெல்லாம் ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும். 
கோவையில் வரைமுறையைத் தாண்டிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் நேரத்தில் போலீஸார் எந்த அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios