ஜோதிமணி நீங்க ரொம்ப ஒழுங்கா..! தெளிவா போட்டு தாக்கும் பிஜேபி பாத்திமா அலி..!

உங்கள் பற்றி பல விதமான பாலியல் அவதூறு இருந்த சூழ்நிலையில் நீங்கள் பாலியல் அவதூறு இல்லாத, கட்சிக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பற்றி நீங்கள் தவறாக பேசுவதும், புகார் கூறிவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும். 

bjp Fathima Ali slams Joythi mani

தனிமனித ஒழுக்கத்தை கொண்டு வந்து கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களையும், கட்சி தலைவர் அண்ணாமலை குறித்தும் தவறாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு பாத்திமா அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவனுக்கு எதிராக இணையத்தில் வெளியான பாலியல் ரீதியான வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேடி ராகவனும் பதவி விலகிவிட்டார்.அதேபோல் வீடியோ வெளியிட்ட மதனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேடி ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியானது. 

bjp Fathima Ali slams Joythi mani

அண்ணாமலைக்கு எதிரான இந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர். இவர்தான் தேசம், தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆகவே அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தார். 

bjp Fathima Ali slams Joythi mani

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி பதிலடி கொடுத்துள்ளார். யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் ;- கடந்த சில நாட்களாக தமிழக பாஜக பற்றியும் அதன் தலைவர் அண்ணாமலை பற்றியும் தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பாஜக பற்றியோ அதன் தலைவர் அண்ணாமலை பற்றியோ பேசக்கூடிய தகுதியற்றவர்கள். கே.டி.ராகவன் செய்தது தனிமனித ஒழுக்கம். அவர் கட்சியில் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவர் மீது தலைமை சட்டப்படி தலைமை நடவடிக்கை எடுக்கும். அந்த தனிமனித ஒழுக்கத்தை கொண்டு வந்து கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களையும் தவறாக பேசுவதும், கட்சி தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை குறித்து தவறாக பேசுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

bjp Fathima Ali slams Joythi mani

இந்த விவகாரத்தில் சம்மந்தம் இல்லாத ஜோதிமணி உள்ளிட்டோர் பேசுகின்றனர். எம்.பி. ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு வாய்கிழியும் பேசும் நீங்கள் பெரியகருப்பன் விஷயம் தொடர்பாக ஏன் பேசவில்லை. அவரை திரும்பவும் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக தேர்வு செய்துள்ளனர். இதை பற்றி வாய் திறக்க முடியாதவர்கள் எல்லாம் ஏன் தவறு செய்தாத அண்ணாமலையை பற்றி பேசவேண்டும். ஜோதிமணி பாஜக கட்சியில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் கொடுத்துள்ளார். பாஜகவில் மகளிர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதில், யாரோ ஒன்று இரண்டு பேர் தன்னுடைய சொந்த சுயநலத்துக்காக செய்த காரியத்தால் கட்சி பொறுப்பேற்காது. மேலும், கட்சி தலைவரும் எதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

bjp Fathima Ali slams Joythi mani

 பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்கள் மீதும், தலைவர் அண்ணாமலை மீது சேற்றை வாரி இறைக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. இவர்கள் முதுகிலேயே ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு பாஜக பற்றி பேசுவது சரியல்ல. நீங்கள் காங்கிரசில் நீங்கள் மாநிலத் தலைவலி ஆக வேண்டும் என்று நினைத்தால், அதற்கு பாஜகவை பயன்படுத்தி கொள்ளாதீங்கள். உங்கள் பற்றியே பல விதமான பாலியல் அவதூறு இருந்த சூழ்நிலையில் நீங்கள் பாலியல் அவதூறு இல்லாத, கட்சிக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பற்றி நீங்கள் தவறாக பேசுவதும், புகார் கூறிவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாத்திமா அலி எச்சரித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios