"புரோக்கர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்"..! பாஜக இளைஞரணி செயலாளரின்  தாறுமாறு பேச்சால் பரபரப்பு..! 

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்கும்  திமுக - வை கடுமையாக விமர்சனம் செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பாஜக இளைஞரணி செயலாளர் டி எஸ் பாண்டியன்.

பாஜவின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் பாஜக நடத்தி வரும் கருத்தரங்கத்தில் இளைஞரணி செயலாளர் அதி தீவிரமாக பேசி வருகிறார். சமீபத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது....

நான் இதுவரை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் மோடிக்கு ஆதராவாக இருக்கிறார்கள்.... சமீபத்தில் கூட ஓர் கல்லூரி முதல்வரை சந்தித்தேன். அவர் சொல்கிறார்... திமுகவை மட்டும் உள்ளே விட முடியாது.. கல்லூரி நடத்த கூட விட மாட்டார்கள். கொலைகாரனை விட கொள்ளைக்காரன் எவ்வளவோ பரவாயில்லை.. அதற்காக நாங்கள் அதிமுகவை ஆதரிக்கவில்லை என பேசுகிறார்; தமிழகத்தில் மாவட்டத்திற்கு 300 புரோக்கர்களை வைத்திருக்கின்றனர் திமுகவினர்; குறிப்பாக திருச்சியில் கே என் நேரு திமுகவிற்கு குடும்ப புரோக்கர்.

அதேபோன்று சென்னையில் எடுத்துக்கொண்டால் அன்பழகன்.. இவர்கள் அனைவரும் திமுகவிற்கு புரோக்கர்களே;  தமிழர்களை பொய் பிரச்சாரம் மூலம் ஏமாற்றும் திமுக ஸ்டாலின் தன் தங்கை கனிமொழியை ராஜபக்சே வீட்டிற்கு சென்றுவர அனுமதித்தது ஏன்? ராஜபக்சே வீட்டிற்கு செல்லும் கனிமொழிக்கு, திருமாவளவன் ஆதரிப்பது ஏன்? இவர்கள் அனைவருமே புரோக்கர்கள்... இப்போது தெரிகிறதா? புரோக்கர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்... தேசபக்தர்கள் நாமும் அதே போன்று ஒன்றுசேர வேண்டும் என கடுமையாக தாக்கி தொடர்ந்து பேசிய இளைஞரணி செயலாளர் பாண்டியன், ஸ்டாலின் ஒரு பிஸ்கோத்து... அமித்ஷாவின் முன்னால் இவர் ஒரு சுண்டைக்காய்... இதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா? இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவோம் என திமுக ஸ்டாலின் அறிவித்திருந்தார் அல்லவா? நடத்த முடிந்ததா? என கடுமையாக நக்கலடித்து பேசி உள்ளார் பாண்டியன். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு ஆதரவாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பாண்டியன், அப்போது மீண்டும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாண்டியனின் இந்த பேச்சு திமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது