Asianet News TamilAsianet News Tamil

தமிழிசை சவுந்தரராஜனின் ’சீப்’பை ஒழித்து வைக்க முடிவு.. பாஜக அதிரடி!

மக்களவைத் தேர்தலுக்கு முன் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் உறுதி என்கின்றனர் கமாலாயம் வட்டாரத்தினர்.

BJP changing tamilnadu head tamilisai
Author
Chennai, First Published Dec 15, 2018, 5:30 PM IST

மக்களவைத் தேர்தலுக்கு முன் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் உறுதி என்கின்றனர் கமாலாயம் வட்டாரத்தினர். 

ஐந்து தேர்தல் ரிசல்ட் நிலவரம் பாஜகவுக்கு பல படிப்பினை வழங்கி இருக்கிறது. ஆகையால், பல விஷயங்களில் தங்களது கட்சியை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இந்தத் தோல்வியை தமிழகத்தில் இருக்கும் பாஜகவில் ஒரு பிரிவினரும், பொதுமக்களும் பேசி கிண்டல் செய்ததை அப்டியே மத்திய உளவுத்துறை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறது. இவர்கள் பேச்சில் மட்டுமே புலி.. செயலில் எலி’ என கிண்டலடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக டெல்லி மேலிடம் தமிழக பாஜக தலைமையில் மாற்றங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

BJP changing tamilnadu head tamilisai

ஏற்கெனவே இருமுறை பதவி நீட்டிப்பு பெற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனை மாற்றும் முடிவிலிருக்கும் பாஜக தலைமை அடுத்து வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவரும், தற்போது தேசிய கயிறு வாரியத் தலைவராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கலாம் என்கிறது பாஜக வட்டாரம். இந்த மூவரில் வானதி ஸ்ரீனிவாசனுக்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios