புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பாஜக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பாஜக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு ஆதரவாக பாஜக தலைவரகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, அவருக்கு திடீரென லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தன்னை சந்தித்த அனைவரையும் தொற்று பரிசோதனை செய்து கொள்ள கோரிக்கை விடுத்து உள்ளார். 

கடந்த 1ம் தேதி புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, நமச்சியவாயமும் உடனிருந்தார். மேலும், நேற்று முன்தினம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நமச்சிவாயம் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பித்தக்கது.