உத்தரப் பிரதேசத்தில் சாதி, மத அரசியலை உடைத்து பாஜக பெரும் வெற்றியை கண்டு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் சாதி, மத அரசியலை உடைத்து பாஜக பெரும் வெற்றியை கண்டு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு கடந்த 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிப்பெற்றது.

காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதி, மத அரசியலை உடைத்து 4 ஆவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட 198 வேட்பாளர்கள் மற்றும் 134 ஆவது வார்டில் வெற்றி பெற்ற உமா ஆனந்தன் உள்ளிட்டோருடன் பாஜக தலைவர் அண்ணாமலை தி.நகர் கமலாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கருப்பு முருகானந்தம், முன்னாள் எம்பி.சசிகலா புஷ்பா, சென்னை தேர்தல் பணிக்குழு தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள். மேலும் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து முப்பத்தி மூன்று ஆண்டுகளாக சாதி, மத அரசியலை வைத்து உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஆட்சியை கலைத்து பாஜக பெரிய வெற்றியை கண்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில் தனித்து போட்டியிட்ட பாஜக 8.1 சதவீதம் வாக்குக்களை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.