சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் விசிக.. திருமாவுக்கு தூண்டில் போட்ட பாஜக - திடீர் ட்விஸ்ட்

திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழக பாஜகவில் இருந்து குரல் எழுந்துள்ளது.

BJP baited Vck Thirumavalavan a sudden twist in tn politics

கோவையில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும். பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது.

மக்களிடம் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் முடிவு உள்ளது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல முடியாது. முதல்வர் கனவு கண்டு வருகிறார். அப்படி என்றால் திமுக எத்தனை முறை துடைத்தெறியப்பட்டுள்ளது. திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதல்வர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வார்த்தை அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார்.

BJP baited Vck Thirumavalavan a sudden twist in tn politics

இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

காங்கிரஸ் ஏன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் தோல்வியுற்றார் என்பதை கவனிக்கட்டும். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டபுள் டிஜிட்டில் கூட இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. ஏன் ஒரு சட்டமன்றத்திற்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள்.

தோல்வியின் காரணங்களை ஆராய்வோம். சரி செய்ய முயற்சிப்போம். சொந்தத் தொகுதியில் தோற்கப் பல காரணம் இருக்கலாம். சிடி ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்சனையாக இல்லை.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

BJP baited Vck Thirumavalavan a sudden twist in tn politics

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. அப்போதும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர். மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி நூறு சதவீதம் உறுதி. திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு ஆகாது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்.

எந்த பட்டியல் இன பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல் குடும்ப அரசியல் தான் திராவிட மடல் என நிரூபிக்கின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios