Asianet News TamilAsianet News Tamil

சிக்கல் தீர்ந்தது: மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்தது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு இடையே இழுபறியாக  இருந்த தொகுதிப்பங்கீடு இன்று முடிவுக்கு வந்தது. இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தனர்.

BJP and sivasena alliance
Author
Mumbai, First Published Oct 4, 2019, 11:07 PM IST

இதன்படி, சிவசேனாவுக்கு 126 தொகுதிகளும், பாஜகவுக்கு 148 தொகுதிகளும், கூட்டணிக் கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால், இதுவரை இரு கட்சிகளும் அதிகாரபூர்வமாக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளன.

இந்த சூழலில் வோர்லி தொகுதி சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு ஒதுக்கப்பட்டு அந்தத் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கோதூர்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சிவசேனா கட்சியும், பாஜகவும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன முறைப்படி அறிவிக்கவில்லை. இந்த சூழலில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் மும்பையில் ஊடகங்களைச் சந்தித்தனர். 

அப்போது அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனா கட்சி 126 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி 14 தொகுதிகளிலும், மற்ற 148 இடங்களில் பாஜகவும் போட்டியிடுகிறது. இருகட்சிகளுக்கும் இடைேய மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது ேதர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்  எனத் தெரிவித்தனர்

Follow Us:
Download App:
  • android
  • ios