Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியை அடிச்சு தூக்கும் பாஜக கூட்டணி... எல்லாக் கருத்துக்கணிப்பிலும் வெற்றி முகம்..!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று வாக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

BJP alliance capture Puducherry... Victory in all polls ..!
Author
Chennai, First Published Apr 29, 2021, 8:57 PM IST

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த யூனியன் பிரதேசம் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக-அதிமுக ஓர் அணியாகவும் காங்கிரஸ்-திமுக-விசிக-சிபிஐ இன்னொரு அணியாகவும் களமிறங்கின. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் களமிறங்கின. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் விசிக, சிபிஐ தலா ஒரு தொகுதியிலும் களமிறங்கின.BJP alliance capture Puducherry... Victory in all polls ..!
ஏப்ரல் 6 அன்று தேர்தல் முடிந்த நிலையில், மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 16-20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 11 - 13 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. BJP alliance capture Puducherry... Victory in all polls ..!
ஏபிபி-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 19 - 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி 7 - 11 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில்  என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios