மும்முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில்,  அப்போதும் பாஜக- அதிமுக கூட்டணி 23 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும்,  அதில் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு 3 தொகுதிகளும், என்.ஆர் காங்கிரஸுக்கு 1 தொகுதியும், எல்டிஎப் எனப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 1 தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்த்தியால் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகியோர் பதவி விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி, என்.ஆர் காங்கிரஸ், அதிமுக பாஜக கூட்டணி ஆகிய இரு அணிகள் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவானது. 

பாஜக சார்பில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி அங்கு உறுதியாகிவிட்ட நிலையில் என்.ஆர் காங்கிரஸ் மதில் மேல் பூனையாக உள்ளது.இந்நிலையில் என். ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை என்.ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் புதுவையில் மும்முனைப் போட்டி ஏற்படக் கூடும் என்ற நிலை உள்ளது.

அதாவது அதிமுக-பாஜக ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்- திமுக மற்றொரு கூட்டணியாகவும், என. ஆர் காங்கிரஸ் மூன்றாவது அணியாகவும் தேர்தலை சந்திக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் என். ஆர் காங்கிரஸ் அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்பதற்கான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. 

புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் பெங்களூருவை மையமாகக் கொண்ட ரெனைசான்ஸ் பவுண்டேஷன் என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், பாஜக-அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி, திமுக-காங் கூட்டணி என நேருக்கு நேர் இரு முனை போட்டி ஏற்பட்டால் அதில் பாஜக- அதிமுக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களையும், காங்கிரஸ்-திமுக கூட்டணி 1 இடத்தையும் ( எல்டிஎப்) இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 1 இடத்தையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக-அதிமுக ஒரு அணியாகவும், காங்- திமுக மற்றொரு அணியாகவும், என்.ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அதனால் மும்முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், அப்போதும் பாஜக- அதிமுக கூட்டணி 23 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், அதில் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு 3 தொகுதிகளும், என்.ஆர் காங்கிரஸுக்கு 1 தொகுதியும், எல்டிஎப் எனப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 1 தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன. 

அதேபோல் இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாது எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது, உள்ளூர் மொழியில் அச்சிடப்பட்ட கேள்வி பதில்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது, பிப்ரவரி மாதத்தில் கடைசி வாரத்தில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது, சயின்டிஃபிக் ரேண்டம் அடிப்படையில் ஒரு கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக சென்று தொகுதிக்கு 200 பேர் என்ற அடிப்படையில் கருத்துகணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.