Asianet News TamilAsianet News Tamil

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜக..?? தமிழக மக்களை வஞ்சிக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொந்தளிப்பு.

 இதனை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். விவசாயம், வேளாண், வங்கி ஊழியர்கள் விவகாரம் என தொடர்ந்து மத்திய அரசு தமிழக மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வஞ்சித்து வருகிறது.

BJP against backward people .. ?? Deceives the people of Tamil Nadu, the Marxist Communist turmoil.
Author
Chennai, First Published Oct 17, 2020, 3:26 PM IST

நீட் தேர்வில் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை தராதது அவர்களுக்கு மட்டுமல்ல சமூக நீதிக்கு எதிரான செயல் என ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செங்கோடியை ஏற்றி வைத்தார். கொடியேற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன். நீட் தேர்வு வேண்டாம் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நிலைப்பாடு. 

BJP against backward people .. ?? Deceives the people of Tamil Nadu, the Marxist Communist turmoil. 

ஒவ்வொரு ஆண்டும் நீட் தொடர்பான குளறுபடி ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வில் நீதிமன்றம் கூறியும் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை தராதது அவர்களுக்கு மட்டுமல்ல சமூக நீதிக்கு எதிரான ஒரு செயல். மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக செயல்படுகிறது. இதனை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். விவசாயம், வேளாண், வங்கி ஊழியர்கள் விவகாரம் என தொடர்ந்து மத்திய அரசு தமிழக மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வஞ்சித்து வருகிறது. 

BJP against backward people .. ?? Deceives the people of Tamil Nadu, the Marxist Communist turmoil.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து என்பது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை படி கல்வியை வணிக மயமாக்கும் ஒன்று. சூரப்பா மாநில அரசை கேட்காமல் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவது கண்டிக்கத்தக்கது. உயர்கல்வித்துறை அமைச்சர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios