திமுக தோல்வியடையும் என மு.க.அழகிரி சாபம் விட்டுள்ளார். பாகிஸ்தானிலுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தால் இரு நாடும் நாசமாகிவிடும் என்பது கவலையாக உள்ளதாக வைகோ கூறியிருக்கிறார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி நேற்று சென்னை விமான நிலையத்தில், அளித்த பேட்டியில்; லோக்சபா தேர்தலில், உங்கள் ஆதரவு யாருக்கு? இப்போது, சொல்ல மாட்டேன். தேர்தல் அறிவிப்பு வந்த பின் சொல்கிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு, இந்த தேர்தலில், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த தேர்தல் போலவே, இந்த தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்கும் என அழகிரி சாபம் விட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மார்ச், 6ம் தேதி, தமிழகத்துக்கு வந்தால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கறுப்புக் கொடி போராட்டம் நடக்கும், என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். 

இது குறித்து, அவர் நேற்று பேசிய அவர்;  புல்வாமா தாக்குதலை நடத்தியவன், பாகிஸ்தானில் இருந்து வந்தவன் அல்ல. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அவனின் செயல், மிகக் கொடூரமானது. யுத்த சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என, ஒரு வாரமாக வலியுறுத்துகிறேன். யுத்தம் ஏற்பட்டால், இரு நாடுகளும் நாசமாகி விடும், என்பதே என் கவலை. பிரதமர் மோடி மார்ச், 1ம் தேதி, தமிழகத்துக்கு வந்தால், குமரி மாவட்டத்தில், கறுப்புக் கொடி போராட்டம் நடக்கும் என இவ்வாறு அவர் கூறினார்.