திருவனந்தபுரத்தில்  நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் பேசிய கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருப்பதால் சங் பரிவார் அமைப்புகள் ஆட்டம்போடுகின்றன. இடதுசாரி அமைப்பு எப்போதும் இதை எதிர்த்து வருகிறது.

இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய  காங்கிரஸின் நிலை இன்று மிக மோசமாக உள்ளது. நாறுபவனை சுமந்தால் சுமப்பவனும் நாறுவான் என்ற நிலைதான் கர்நாடக மாநிலத்தில் நடக்கிறது. காங்கிரஸை நம்பக்கூடாது என்று நாங்கள் அன்றே சொன்னோம். அதை விளக்கும் விதமாக இப்போதைய சம்பவங்கள் நடக்கின்றன என கடுமையாக குற்றம் சாட்டினார்..

காங்கிரஸ்காரர்கள் எப்போது கட்சி மாறி போவார்கள் என்று கூறமுடியாது. பி.ஜே.பி. வாரி இறைக்கும் பணத்திற்கு கையும் கணக்கும் இல்லை. பலா மர இலையைக் காண்பித்தால் நீட்டிக்கொண்டுபோகும் ஆட்டுக் குட்டிகளைப் போன்ற சில மோசமான ஆட்கள்தான் காங்கிரஸ் தலைவர்கள் என குற்றம்சாட்டினார்.
.
நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி இப்படி இருக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ள பினராயி விஜயன் . வெற்றி கிடைக்கும்போது மட்டுமல்ல, தோல்விகள் ஏற்படும்போதும் அதை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.