நிஃபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை, அது ஒரு மோசமான தொற்று நோய் என்று தெரிந்தும் அவர்களை துணைச்சலுடனும், அன்புடனும் கவனித்து சிகிச்சை அளித்ததால் உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வாங்கினார்.

கேரள மாநிலத்தை அண்மையில்  உலுக்கிய நிஃபா  வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் வரை பலியாகினர். நிஃபா வைரஸ் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளானார்.

அப்போது சாகும் தருவாயில் இருந்த நர்ஸ் லினி தன் கணவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் நிஃபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு துணிச்சலுடன் சிகிச்சை அளித்து காப்பாற்றியது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், பக்ரைனில் இருந்து திரும்பி வந்து 2 குழந்திகளையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதயிருந்தார்.. 

பக்ரைனில் பணிபுரிந்து வரும் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் லினி எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைராலானது.

இந்நிலையில் நிஃபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு  வேலை மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி  லினியின் கணவர் சஜேஷ்க்கு, கோழிக்கோடு மாவட்ட சுகாதார அதிகாரியின் கீழ் பணியாற்றும் எழுத்தர்  வேலைக்கான பணி ஆணையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர்  பினராயி  விஜயன் , ‘ லினியின் குடும்பத்திற்கு அறிவித்திருந்த நிவாரண உதவிகள் அனைத்தையும்  அரசு நிறைவேற்றிவிட்டது’ என தெரிவித்துள்ளார். 

கேரள அரசின் இந்த மனிதாபிமானமிக்க நடவடிக்கையை பொ மக்கள் பாராட்டி வருகின்றனர்.