பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த ஜேடியு கூட்டணி, மெகா கூட்டணியும் தற்போது சம்பலத்தில் உள்ளதால் இரு கூட்டணிகளுக்கும்  இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதே நேரத்தில் பீகாரில்  தனியாக பாஜக தற்போது வரை 64 தொகுதிகளை கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வெறும் 26 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.  

மொத்த த்தில் தற்போதுவரை ஆர்.ஜே.டி 114 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் நிதீஷ்குமார் தலைமையிலான  ஜே.டி.யூ வெறும் மூன்று தொகுதிகள் மட்டுமே பின்தங்கி 111  இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆகவே இரு கூட்டணிக்கும் இடையேயான மிகக் கடுமையான போட்டி இருந்து வருகிறது. தேஜஷ்வி தலைமையிலான மெகா கூட்டணிக்கு மிக நெருக்கத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி சம்பலத்துடன் தொகுதிகளை கைப்பற்றி வருவதால் வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது. 

 

பிகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு  எண்ண தொடங்கப்பட்டன. பிகாரில் 55 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் (பாஜக-ஐக்கிய ஜனதா தளம்) vs (காங்கிரஸ்-ஆர்ஜேடி) கூட்டணிக்கும் இடையே காலை முதலே கடும் போட்டி நிலவுகிறது பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன, இதில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியைக் கைப்பற்றும். இந்நிலையல் காலை முதல் விருவிருப்பாக வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆர்.ஜே.டி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி 114 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

 

அதே நேரத்தில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 111 இடங்களை கைப்பற்றி  எண்ணிக்கையை  ஈடுசெய்ய போராடி வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது பின்தங்கியிருந்த ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி மெல்ல மெல்ல வேகம் எடுத்து தற்போது மெகா கூட்டணியுடன் சம்பலத்தை பெற போராடி வருகிறது.  மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் யார் முன்னிலை பெற்று தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் இரண்டு கூட்டணிகளுமே சம பலத்தில் தொகுதிகளை கைப்பற்றி வருவதே அதற்கு காரணம். இன்னும் சில மணி நேரங்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் உறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பீகாரில் தனியாக காங்கிரஸ்  வெறும் 26 இடங்களை பெற்றுள்ள நிலையில் பாஜக 64 தொகுதிகளை கைப்பற்றி தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்துள்ளது. அதே போல் மாநில கட்சிகளான ஜெ.டி.யு-40 தொகுதிகளையும், ஆர்.ஜே.டி- 75 தொகுதிகளையும் இடது சாரிகள் சி.பி.எம்-3 , சி.பி.ஐ-3 , சி.பி.ஐ (எம்எல்)-7,  வி.இசன்-4,  எச்.ஏ.எம்-3 கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.