Asianet News TamilAsianet News Tamil

#Biharelection2020: வெற்றி விளிம்பில் பாஜக-ஜேடியு கூட்டணி... பாஜகவின் கோட்டையானது பீகார்..

மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய 1 மணி நேரமே உள்ளதால் கிட்டதட்ட பாஜக-ஜேடியு கூட்டணியின் வெற்றி உறுதியாகி உள்ளது

Biharelection2020 BJP-JDU alliance on the verge of victory ... BJP's stronghold in Bihar ..
Author
Chennai, First Published Nov 10, 2020, 11:22 AM IST

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த ஜேடியு கூட்டணி 128 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து  தேஜஷ்வி தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணி சரசரவென குறைந்து  99 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.  இன்னும் வாக்கி எண்ணிக்கை நிறைவடைய ஒரிரு  மணி நேரங்களே உள்ள நிலையில் நிதிஷ்- பாஜக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது என்றே கூறலாம். 

அதே நேரத்தில் பீகாரில் தனியாக பாஜக தற்போது வரை 72 தொகுதிகள் வரை கைப்பற்றி அங்கு தனது பலத்தை நிரூபித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் தற்போதுவரை ஆர்.ஜே.டி 99 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் நிதீஷ்குமார் தலைமையிலான  பாஜக-ஜே.டி.யூ கூட்டணி 128  இடங்களை கைப்பற்றி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இரு கூட்டணிக்கும் இடையேயான மிகக் கடுமையான போட்டி இருந்து வந்த நிலையில், தேஜஷ்வி தலைமையிலான மெகா கூட்டணிக்கு சரிவை சந்தித்துள்ளது. 

Biharelection2020 BJP-JDU alliance on the verge of victory ... BJP's stronghold in Bihar ..

பிகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு  எண்ண தொடங்கப்பட்டன. பிகாரில் 55 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் (பாஜக-ஐக்கிய ஜனதா தளம்) vs (காங்கிரஸ்-ஆர்ஜேடி) கூட்டணிக்கும் இடையே காலை முதலே கடும் போட்டி நிலவுகிறது பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன, இதில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியைக் கைப்பற்றும். இந்நிலையல் காலை முதல் விருவிருப்பாக வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியு கூட்டணி 128 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. 

Biharelection2020 BJP-JDU alliance on the verge of victory ... BJP's stronghold in Bihar ..

அதே நேரத்தில் தேஜஷ்வி தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணி சரசரவென குறைந்து  99 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய 1 மணி நேரமே உள்ளதால் கிட்டதட்ட பாஜக-ஜேடியு கூட்டணியின் வெற்றி உறுதியாகி உள்ளது. பீகாரில் தனியாக காங்கிரஸ்  வெறும் 20 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக 72 தொகுதிகளை கைப்பற்றி தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்துள்ளது.

Biharelection2020 BJP-JDU alliance on the verge of victory ... BJP's stronghold in Bihar ..

அதே போல் மாநில கட்சிகளான ஜெ.டி.யு-49 தொகுதிகளையும், ஆர்.ஜே.டி- 67 தொகுதிகளையும் இடது சாரிகள் சி.பி.எம்-3 , சி.பி.ஐ-2 , சி.பி.ஐ (எம்எல்)-9,  வி.இசன்-5,  எச்.ஏ.எம்-3 கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது. அதாவது பீகார் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கி பெற்றிருந்த மாநிலக் கட்சிகளான  ஆர்ஜெடி, மற்றும் ஜெடியு ஆக்கிய கட்சிகளையே பின்னுக்குத் தள்ளி பாஜக சுமார் 72 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிட தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios