Asianet News TamilAsianet News Tamil

மநீம கூட்டணியில் ‘சித்தி’ ராதிகா எதிர்பார்த்த 2 தொகுதிகளையும் வழங்காத ‘பிக்பாஸ்’ கமல்..!

மக்கள் நீதி மய்யம் அமைத்த முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
 

bigboss kamal didnt give 2 constituencies to Radhika sarathkumar
Author
Chennai, First Published Mar 12, 2021, 9:33 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து ‘முதல் கூட்டணி’யை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவானது.  இதையடுத்து கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. bigboss kamal didnt give 2 constituencies to Radhika sarathkumar
இந்நிலையில் சமக போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துறைமுகம், உத்திரமேரூர், அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர், சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம், லால்குடி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, சிவகங்கை, மதுரை தெற்கு, பெரியகுளம், ராஜபாளையம், விருதுநகர், விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், வாசுதேவ நல்லூர், தென்காசி, ஆலங்குளம், திரு நெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்கு நேரி, ராதாபுரம், பத்மனாபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.bigboss kamal didnt give 2 constituencies to Radhika sarathkumar
சமக மகளிர் அணி தலைவி ராதிகா சரத்குமார் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிடுவார் என்று சரத்குமார் அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் பட்டியலில் அந்த இரண்டு தொகுதிகளுமே இடம் பெறவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios