Asianet News TamilAsianet News Tamil

ஒருவருக்கு ஒரு பாட்டில்தான்... அதிரடியாக தொடங்கிய மது விற்பனை..!

ஊரடங்கு அமலில் இருந்த போது ஒருவருக்கு ஒரு பாட்டில் வீதம் சமூக இடைவெளியை கடைபிடித்து மது விற்பனை தொடங்கி இருக்கிறது.
 
Beginning with the sale of wine
Author
Assam, First Published Apr 15, 2020, 12:43 PM IST
ஊரடங்கு அமலில் இருந்த போது ஒருவருக்கு ஒரு பாட்டில் வீதம் சமூக இடைவெளியை கடைபிடித்து மது விற்பனை தொடங்கி இருக்கிறது.Beginning with the sale of wine

அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.Beginning with the sale of wine

இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே மது வாங்க வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்கப்படும் போன்ற சில விதிமுறைகளின் படி மதுக்கடைகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
Follow Us:
Download App:
  • android
  • ios