நாம் ஆட்சியமைக்கும் முன்பே நம் எம்எல்ஏ ஒருவரை இழுத்திருக்கிருப்பது வட இந்தியாவில் பாஜக செய்யும் அதே நரித்தந்திரம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி தலைவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘’கு.க. செல்வம் திமுக எம்எல்ஏ. அதுவும் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். நாம் ஆட்சியமைக்கும் முன்பே நம் எம்எல்ஏ ஒருவரை இழுத்திருக்கிருப்பது வட இந்தியாவில் பாஜக செய்யும் அதே நரித்தந்திரம். தலைமை சாதாரணமாக எண்ணி கடந்தால் தமிழகத்தின் எதிர்காலம் திமுக என்ற இலக்குடன் பயணிக்கும் கொள்கையாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் தொய்வும் நம்பிக்கையின்மையும் ஏற்படும் என்பதை நினைவில் கொள்க!

மாற்றுக் கட்சியினருக்கு முக்கியத்துவம் தாருங்கள். மாற்றுக் கட்சியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் தராதீர்கள். கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அதைவிட முக்கியம் திராவிட கொள்கை. அடுத்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வேரூன்றினால் தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.

அண்ணா, கலைஞர் காலத்தை விட மிக மிக மோசமான காலக்கட்டத்தில் உள்ளோம் என அடிக்கடி நண்பர்களிடம் சொல்வதுண்டு. கட்சி விசுவாசி, நெருங்கிய வட்டம், அடிமட்ட தொண்டன் என அனைவரிடமும் ஆலோசனைகளை கேளுங்கள். பரிசோதனை செய்து முடிவை தாங்கள் எடுங்கள்! உங்கள் மீது முழு நம்பிக்கை உண்டு. சாதனத்தின் இறுக்கம் 2021 என்ற இலக்கை தாண்டி தமிழினத்தின் வளர்ச்சிக்காக நாம் போராட வேண்டும்.

மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் போல் பாஜகவிடம் இருந்து ஆட்சியை தக்க வைக்க போராடும் சூழல் நமக்கு உருவாகி விடவே கூடாது தலைவரே. அடுத்து வர்ற 5 வருஷம் இன்னும் 50 வருஷத்துக்கு அப்படியே இருக்கணும் தலைவரே! இதெப்படி சாத்தியப்படுதுனே எனக்கு புரியலை... ஒரு கட்சி சின்னத்துல நின்னு ஜெயிச்சுட்டு எப்படி வோறொரு கட்சிக்கு தாவ முடியுது எப்படி தேர்தல் ஆணையமும் , சட்டங்களும் இதுக்கு இடம்தருது... இப்ப ஒரு தொகுதியில இருக்க மக்கள் ஓட்டு போட்டு ஒருத்தரை தேரந்தெடுத்தா ஜெயிச்ச உடனே அவர்...

 

தேர்தல் முடிஞ்சு திமுக அருதி பெரும்பான்மையோட ஆட்சி அமைக்குதுன்னு ஒரு பேச்சுக்கு வெச்சுக்கிட்டாலும், பாஜக கவட்டைக்கு இடையில் தார் குச்சி போட்டு மாட்டை வண்டியில் மாட்டி ஓட்டிக்கிட்டு போறதா நிறுத்தவா போகுது. தார் குச்சி போட்டு ஓட்டுறது ஒருத்தர் குலத்தொழில்னா யாரு தடுக்க முடியும்? சட்டசபை தேர்லில் நிற்கும் ஒவ்வொரு பிரதிநிதியிடமும் கட்சி தாவல் தடை குறித்த உறுதிமொழியை முத்திரைதாளில் கையெழுத்து பெற்று டிஜிட்டல் முறையில் ஆவண செய்ய வேண்டும்’’ என மு.க.ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.