Asianet News TamilAsianet News Tamil

பேட்டரியில் இயங்கும் அரசுப் பேருந்து ….. கர்நாடகா மற்றும் தெலங்கானவைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தியது கேரள அரசு….

battery bus introduced by kerala govt
battery bus introduced by kerala govt
Author
First Published Jun 19, 2018, 7:20 AM IST


கேரளத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசானது, சுற்றுச்சூழல்மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேட்டரியில் இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அதிநவீனப் பேருந்துக்கான பேட்டரியை, 5 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர்தூரத்திற்கு பயணிக்கலாம். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி - திறக்கும் வசதிகள் என பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடனேயே சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி ஏற்படுத் தப்பட்டுள்ளது.

குடிநீர், கழிவறை, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி என நவீன வசதியுடன் ரூ. 2 கோடியே 5 லட்சம் செலவில் சொகுசு பேருந்தாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து இயக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கினால் மாநிலத்தில் உள்ள பிறடீசல் பேருந்துகளுக்கு மாற்றாக, 300 பேட்டரிபேருந்துகளை இயக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் இந்த பேருந்தின் முதல் பயணத்தை நேற்று  தொடங்கி வைத்துள்ளார்.ஏற்கெனவே, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அந்த பட்டியலில் 6-ஆவது மாநிலமாக கேரளாஇணைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios