தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்ற நிலையில் தமிழகத்தில் எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்ட கொண்டாட்டம் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர் இனி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமை சரி வராது என்கிற முடிவிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து அதிமுகவில் இருந்தால் அரசியல் எதிர்காலமும் இருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக சுமார் 10 எம்எல்ஏக்கள் திமுக தரப்பு உடன் தொடர்பில் இருப்பதாக பேசப்படுகிறது. இவர்களில் 7 பேர் திமுகவில் சேர வாக்குறுதி அளித்து விட்டதாகவும் இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் உள்ள பாஜக மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் எடப்பாடி தரப்புடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். 

எடப்பாடி தரப்புக்கும் டெல்லி மேலிடத்திற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்த ஒரு சுமூகமான உறவு இல்லை என்று சொல்கிறார்கள். இதனை சரிசெய்ய எடப்பாடி பழனிசாமி எவ்வளவு முயற்சி மேற்கொண்டும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அமித் ஷாவிடம் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. 

இதனை ஏற்று நேற்று பன்வாரிலால் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சகத்தில் அமித் ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பன்வாரிலால் பேசிவிட்டு திரும்பியுள்ளார். பன்வாரிலால் அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்னதாக மேற்கு வங்க ஆளுநரும் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அதனை காரணம் காட்டி அங்கு மாற்றங்களை ஏற்படுத்த அமித்ஷா வியூகம் வகுத்து வருகிறார். 

இதே சமயத்தில் தமிழக ஆளுநரையும் அமித்ஷா அழைத்து பேசியுள்ளதால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு அல்லது ஆட்சி கலைப்புக்கு பாஜக மேலிடம் திட்டம் இருக்கிறதா என்கிற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மாற்றி விற்று தங்களுக்கு உகந்த ஓ பன்னீர் செல்வத்தை முதலமைச்சராகும் திட்டத்திலும் பாஜக மேலிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எடப்பாடி தரப்பு திக் திக் மனநிலையுடன் உள்ளது.