Asianet News TamilAsianet News Tamil

வெள்ளிக்கிழமை சாமி தரிசனத்தை தடை செய்வதா..? திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது.. பொங்கி எழுந்த பொன்னார்.!

இந்து மக்களின் வெள்ளிக் கிழமை சாமி தரிசனத்தை தடை செய்ததன் மூலம் திமுகவுக்கு சனி பிடித்து விட்டது என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
 

Banning Sami Darshan on Friday ..? Saturn has caught up with DMK..Pon.Radhakrishnan attacked
Author
Chennai, First Published Oct 8, 2021, 9:09 AM IST

கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. டாஸ்மாக், சினிமா தியேட்டர் போன்றவை திறக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.Banning Sami Darshan on Friday ..? Saturn has caught up with DMK..Pon.Radhakrishnan attacked
“திருச்செந்துார் கோயிலுக்கு அதிகம் செல்வது திமுககாரங்கதான். செய்த பாவங்கள் தீர, கோயிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவீர்கள். இதில் நீங்கள் (திமுக) செய்த பாவம் என்ன தெரியுமா? கோடிக்கணக்கான பக்தர்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்காததுதான். இந்துக்கள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதித்து உத்தரவை இடுங்கள். நீங்கள் அப்படி உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பாவத்தை தீர்க்க திமுகவினர் திருச்செந்துார், காசிக்கு என எங்குச் சென்றாலும் தீராது. உங்களுக்குச் சனி பிடித்தே தீரும். இது அரசுக்கு நல்லது அல்ல. தமிழகத்துக்கும் நல்லது அல்ல.Banning Sami Darshan on Friday ..? Saturn has caught up with DMK..Pon.Radhakrishnan attacked
தமிழக பாஜக தமிழக மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. அதில் இந்துக்களின் உரிமைகளைப் பற்றி பேசக் கூடாது என்கிறார்கள். இந்துக்களின் உரிமையைப் பேசினால் மதசார்பற்றதன்மையாக இருக்காது என நீங்கள் கூறினால், உங்களுடைய போலி மதசார்பின்மையைத் தீயிட்டு கொளுத்துவோம். இந்து மக்களுக்கு எல்லா நாட்களிலும் கோயிலுக்கு சென்று வழிபடும் உரிமையை வழங்குங்கள். இந்த உரிமை மறுக்கப்பட்டால் வருங்காலங்களில் கோயிலுக்குள் நுழைந்தே தீருவோம்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios