Asianet News TamilAsianet News Tamil

விடுதலை புலிகள் மீதான தடை தேவையற்றது!! சீமான் திடீர் பாய்ச்சல்.!

மலேசியாவில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாகியும் விடுதலை செய்யப்படாத 12 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ban on LTTE is unnecessary !! Seaman's sudden leap.!
Author
Tamilnádu, First Published Feb 10, 2020, 11:08 PM IST

By; T.Balamurukan

மலேசியாவில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாகியும் விடுதலை செய்யப்படாத 12 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ban on LTTE is unnecessary !! Seaman's sudden leap.!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  "விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட 12 தமிழர்களைக் கொடுஞ்சட்டத்தின் கீழ் மலேசியக் காவல்துறை கைதுசெய்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அவர்களை விடுவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலமும், சிறைப்படுத்துதல்கள் மூலமும் தமிழர்களைக் குற்றவாளிகளாகப் பன்னாட்டுச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் தமிழர்களைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் செயலாகும்.விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக அறிவித்துவிட்டப் பிறகு, புலிகள் மீதானத் தடையே தேவையற்றது எனக்கூறி அத்தடையை நாங்கள் நீக்க வலியுறுத்துவது இதுபோன்ற அடக்குமுறைகளினால்தான்.

Ban on LTTE is unnecessary !! Seaman's sudden leap.!

ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட 12 பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு, மத்தியில் ஆளும் பாஜக அரசின் வாயிலாக உரிய அழுத்தம் தந்து விடுதலையைத் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios